Monthly Archives: நவம்பர் 2010

“myindians.com” யாரை ஏமாற்ற பின்னப்பட்டுள்ள வலை?

அண்மைய காலமாக வானொலி, பத்திரிகைகளில் “மைஇந்தியன்ஸ்.காம்” என்றொரு வலைதளம் பற்றி ஓயாமல் கூவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மை இந்தியன்ஸ் வலைதளம் உண்மையில் யாரை ஏமாற்ற பின்னப்பட்டுள்ள வலை என்று புரியவில்லை. சாதாரணமாக நாம் கூகிளில் தேடினால் கிடைக்கக்கூடிய வலைதள பின்னல்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தந்துள்ளதைத் தவிர.. மை இந்தியன்ஸ் வலைதளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை.

இந்த வலைதளம் குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. முழு பக்க வண்ண விளம்பரம் மற்றும் வானொலி விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? இந்த வலைதளம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது? ஒரு விபரமும் அந்த வலைதளத்தில் இல்லை. ஆனால் இவர்கள் உதவிய தேவி, ரவி, சுந்தரி போன்றோர், சிறு தொழிலதிபர்களாக வெற்றி நடை போடுவதாக சொல்கின்றனர். அவர்களில் ஒருத்தர் கூட எனக்குத் தெரிந்தவர் பட்டியலில் இல்லை என்பது வேதனையான உண்மை. அதைவிட, எனக்குத் தெரிந்த ரவீந்திரன், பாலமுருகன், செல்வி, ஜானகி எல்லாம் இன்னமும் வர்த்தக கடன் தொகைக்கு விண்ணப்பித்து விட்டு இன்னமும் காத்திருக்கிறார்கள் என்பது தனிச் சோகக் கதை.

மை இந்தியன்ஸ் காட்டியுள்ள வலைதளங்களை முன்பே கண்டுபிடித்து விண்ணப்பித்த இவர்கள் பெயர் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும்போது மை இந்தியன்ஸ் சுட்டிக் காட்டியுள்ள சிலருக்கு மட்டும் எப்படி கடன் தொகை கிடைத்தது?

“ரைட்டு… நமக்குதான் வெவரம் பத்தலை போலிருக்கு!”

இது பற்றி வெலாவரியா வெளக்க கூடிய நல்லுள்ளங்கள் யாராவது இருக்கீயளா?