7ஆம் அறிவு (2011)

வழக்கம் போலவே கடைசியில் அமைந்திருக்கும் Couple Seat. சனிக்கிழமை இரவு 9.15 காட்சி. ட்ரோபிகானா சிட்டி மால் GSC. பொதுவாக இந்த திரையரங்குக்கு தமிழர்கள் வருவது குறைவு. எல்லாரும் தி கெர்வ், 1 உத்தாமா அல்லது பிஜே ஸ்டேட் பிக் சினிமா திரையரங்குகளை நோக்கியே படையெடுப்பார்கள். இந்த முறை அதிலொரு மாற்றம். 4 நாட்களுக்கான 24 காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன. படம் வெளிவந்து 4 நாட்களாகி விட்டது. ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதை பார்க்க முடிந்தது. படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் செய்த மாயம் இது. ஆனால் படம் ஏமாற்றவில்லை.  

டாமோ என சீன மக்களால் போற்றி வணங்கப்படுகிற போதிதர்மன் ஒரு தமிழன். இந்த ஒற்றை வரியை தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து அதை நமக்கெல்லாம் தீபாவளி விருந்தாக பரிமாறி இருக்கிறார் முருகதாஸ்.

 போதிதர்மன் பல்லவ இளவரசன். நோக்கு வர்மம், தற்காப்புக் கலை, மூலிகை மருத்துவத்தில் அவரொரு நிபுணர். சீனாவில் பரவி வரும் ஒரு மர்ம நோய் தமிழ்நாட்டை பீடிக்காமல் இருக்க அவரை சீன தேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். (பலர் அவர் ஏன் சீன தேசத்துக்குப் போனார் என புரியாமல் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவரும் அங்கு சென்று அந்த நோயை குணப்படுத்துகிறார். அப்படியே அந்த சீன மக்களுக்கு தற்காப்பு கலையையும் நோக்கு வர்மத்தையும் கற்றுத் தருகிறார். அந்த சீன மக்களின் சுயலநல வேண்டுகோளுக்காக விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு அங்கேயே இறந்து சமாதியாகிறார்.

இப்போது போதிதர்மன் கற்றுக் கொடுத்த அதே கலைகளைக் கொண்டு இந்தியாவை தனது கைப்பாவை ஆக்கிக் கொள்ள சீன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு சுபா என்றொரு மாணவி போதிதர்மனின் டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. தங்களது திட்டத்திற்கு சுபாவின் ஆராய்ச்சி இடையூறு விளைவிக்கும் என்பதால் அவளை அழிக்க டோன் லீ என்றொரு ஆளை அனுப்பி வைக்கின்றனர். சுபாவையும் இந்தியாவையும் காப்பாற்ற போதிதர்மன் வம்சாவளியில் பிறக்கின்ற அரவிந்த் உதவுகிறார். இதுதான் படத்தின் கதை.

ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் படமென்றாலும் இடையிடையே ஸ்ருதிஹாசனும் சூர்யாவும் பேசும் சில வசனங்கள் நமக்கு  அறை கொடுக்கின்ற எண்ணத்தை உருவாக்குவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெருமிதம் நமக்கு மட்டும்தான் இருக்கிறதென ஸ்ருதிஹாசனும் தமிழன் போகிற இடங்களில் எல்லாம் அடி வாங்குகிறான் என்று சூர்யா சொல்லும்போதும் வலிக்கிறது.

9 நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை கொன்றால் அது வீரமல்ல என சூர்யா சொல்லும்போது புலித் தலைவன் மீது ஏற்படுகின்ற அந்த கண நேர மதிப்பு.. அதை விவரிக்க வார்த்தையில்லை.

உண்மைதான். இந்தப் படம் நமது உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் லாபம் பார்க்கும் முயற்சிதான். திரைப்படம் என்பதே லாபத்திற்காக செய்யப்படும் வணிகமே தவிர நம்மை திருத்தவோ அல்லது நமக்கு கருத்து சொல்லவோ உருவாக்கப்படுவதில்லை. அப்படியொரு எண்ணத்தோடு படம் பார்க்க போகிறவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றும் புரியவில்லை. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு கேணைத்தனமாக கூற்றோ.. அதுபோலதான் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தபின்பு கன்னாபின்னாவென படத்தின் இயக்குநருக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்குவதும்.
 
ஒரு படத்தைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. பல கோடிகளை கொட்டி படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளரை விட, ஒரு கதையை உருவாக்கி அதை சினிமாவாக எடுக்கின்ற இயக்குநரை விட 10-15 ரிங்கிட் கொடுத்து விரும்பியே போய் படம் பார்த்து விட்டு கருத்து வாந்தி எடுக்கின்ற சிலரின் ஒலக சினிமா தேடல் என்னவென புரியவில்லை. ஏன்பா.. நீங்களும் ஓர் ஒலக சினிமா எடுத்துதான் காட்டுங்களேன். அப்போதாவது உங்கள் ஒலக சினிமாவின் புரிதல் என்னவென எங்களுக்கும் விளங்குமல்லவா? சரி, அவர்கள் எதையோ செய்து தொலைக்கட்டும். உலக இயக்கம் நடைபெற இது போன்ற கோமாளிகளும் தேவைப்படுகிறார்கள்.

இந்தப் படம் முடிந்து வெளியே கார் நிறுத்துமிடத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 85 விழுக்காடு சீனர்களே என்னைச் சுற்றி அங்கே இருந்தார்கள். படத்தில் காட்டப்படுவது போல சீனர்களில் பலர் சுயநலவாதிகளே. இது கொஞ்சம் காரமான கூற்றாக தோன்றலாம். ஆனால் போதிவர்மன் கற்றுக் கொடுத்தது போல சீனர்களிடமிருந்து நீங்கள் எதையும் இலகுவாக கற்றுக் கொள்ள முடியாது. நமக்கு தெரியாத ஒன்றை அவர்களிடம் கேட்டால் அதற்கொரு தயாரான பதிலை அவர்கள் வைத்திருப்பார்கள். அது… “தெரியாது”.

சீனர்களோடு வேலை செய்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். தொழில் நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள்.

தொழில் விவகாரத்திலும் சீனர்கள் நடந்துக் கொள்ளும் முறை புரிந்துக் கொள்ள முடியாதது. தன் இனத்திற்கு வியாபாரம் கொடுக்கவே அவர்கள் விரும்புவார்கள். ஒரு கடைவரிசையில் 3 வேறு இனத்தவரின் கடைகள் இருந்தால் இதில் சீனர் கடையாக தேடிச் சென்று பொருட்கள் வாங்குவது தொடங்கி, மற்ற வியாபாரிகளை குறைத்து பேசுவது வரை சீனர்களுக்கு நிகர் சீனர்களே. மிக நல்ல சீன முதலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே.

இதில் தமிழன் மட்டும்தான் “தவுக்கே, பாஸ்” என இன்னமும் சீனர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்களை இப்படி முதலாளி – முதலாளி என்றழைப்பதில் தமிழர்களுக்கு அப்படியொரு ஆனந்தம். தவிர தங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாரும் கேட்பதற்கு முன்பாகவே தம்பட்டம் அடித்து காட்டிக் கொள்வதும் ஏமாளித்தனமாக தன் இனத்தை தவிர மற்ற இனத்தவருக்கு தங்களுக்குத் தெரிந்ததைக் கற்று தருவதிலும் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என யார் சொன்னது? பெரும்பாலான தமிழனிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன்னொரு தமிழன் எப்படி நம்மை விட நன்றாக வாழலாம் என்ற வயிற்றெரிச்சல். இதனால் ஏற்படும் பொறாமையில் ஆயிரம் பிரிவினைகள், கூச்சல்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளைவு நம்மை பிரநிதிக்க 30 கட்சிகள் 300 தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

படம் முடிந்து வெளியே வரும்போது இளைஞர் பட்டாளத்திலிருந்து  ஒரு கபோதி கூவியது “என்னவோ பெரிய
..தி தர்மனாம். பேசாம வேலாயுதம் பார்க்க போயிருக்கலாம்”. இதுதான் நமது இளைய தலைமுறையின் லட்சணம்.  இவர்களுக்கு உலக சினிமாவை எடுத்துக் காட்டினால் மட்டும் மாற்றம் வந்துவிடப் போகிறதா? அடப்போங்கடா…

பி.கு: இது எனது 100வது பதிவு.

3 responses to “7ஆம் அறிவு (2011)

  1. சூப்பர். நெடுநாட்கள் கழித்து படித்தாலும், புதியது போலவே இருக்கிறது உங்கள் இடுகை.

    சீனர்களின் கடையை சீனர்கள் தேடுவதை நான் பார்த்தில்லை. ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் அப்படி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    என்னுடன் தங்கியிருந்த ஒரு இஸ்லாமிய நண்பனின் மூலமே இவையெல்லாம் தெரிந்தது. ஆனால் அவன் அவர்கள் இன நண்பர்கள் கிடைத்ததும், அவர்களுடன் தங்கிவிட்டான்.

    • நீங்கள் சொல்வதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது நண்பரே… பொதுவாக இஸ்லாமியர்கள் தங்களது சகோதரத்துவத்தை பேணுவதில் அதீத அக்கறை காட்டுபவர்கள். அந்த மதம் அவர்களை அப்படி வார்த்தெடுத்துள்ளது. ஆனாலும் பிற இனத்தவர் மீது அவர்கள் தேவையில்லாமல் வெறுப்பை உமிழ்பவர்கள் அல்லர். விருந்தோம்பலில் இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. தவிர, சாலையில் யாரேனும் விபத்துக்குள்ளாகும் தருணங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உதவ விழைபவர்கள் இஸ்லாமியரே. எனக்குத் தெரிந்து பலமுறை நான் இதனை நேரில் கண்டுள்ளேன். பொதுவாக சீனர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவ்வளவு அக்கறை காட்டுபவர்கள் அல்ல. தங்களுக்கு ஆதாயம் இல்லாத எந்த விஷயத்திலும் அவர்கள் தலையிடுவதில்லை.

  2. அருமையான கருத்து பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

பின்னூட்டமொன்றை இடுக